'மிராய்' படத்திற்கு நீண்ட பதிவிட்டுப் பாராட்டிய அல்லு அர்ஜுன் | முன்பதிவில் 75 கோடி வசூலித்துள்ள 'ஓஜி' | ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்டவராக நடித்த புது ஹீரோயின் | இசையமைப்பாளர் பரத்வராஜ்க்கு குறள் இசையோன் விருது : கனடா உலக திருக்குறள் மாநாட்டில் கவுரவம் | தீபாவளி போட்டியில் இன்னும் சில படங்கள் | பிளாஷ்பேக்: எஸ்.பி.முத்துராமனை ஏமாற்றிய 50வது படம் | சுபத்ரா ராபர்ட் கதை நாயகியாக நடிக்கும் 'மெல்லிசை' | ராம்லீலா நாடகத்திலிருந்து பூனம் பாண்டே நீக்கம் | விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு | பிளாஷ்பேக்: சிவாஜி நாடகம் பார்க்க ஸ்பெஷல் ரயில் |
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க உள்ள 'ஸ்பிரிட்' படத்திலிருந்து ஹிந்தி நடிகை தீபிகா படுகோனே சில மாதங்களுக்கு முன்பு நீக்கப்பட்டார். அதிக சம்பளம், குறைந்த மணி நேர வேலை, நிறைய உதவியாளர்கள் என அவர் 'டிமாண்ட்' அதிகமாக இருந்தது என தகவல் வெளியானது. தற்போது 'கல்கி 2898 ஏடி' படத்தின் இரண்டாம் பாகத்திலிருந்தும் தீபிகா படுகோனே நீக்கப்பட்டுள்ளார்.
தற்போது அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். 'ஸ்பிரிட், கல்கி 2898 எடி 2' ஆகிய இரண்டு படங்களிலிருந்து நீக்கப்பட்டது குறித்து எந்தவிதமான விளக்கத்தையோ பதிலையோ தீபிகா அளிக்கவில்லை. அதேசமயம், ஷாரூக்கான் நடிக்க உள்ள 'கிங்' படத்தில் இணைந்தது குறித்து நேற்று ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில், “ஓம் ஷாந்தி ஓம்" படப்பிடிப்பின் போது கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு திரைப்படத்தை உருவாக்கும் அனுபவமும், அதை உருவாக்கும் மனிதர்களும், அதன் வெற்றியை விட மிக முக்கியம் என்று அவர் எனக்கு முதல் பாடமாக கற்பித்தார். நான் இதை முழுமையாக ஒப்புக்கொள்கிறேன். இந்த கற்றலை பின்பற்றி ஒவ்வொரு முடிவையும் எடுத்து வந்திருக்கிறேன். அதனால்தான், நாங்கள் ஒன்றாக எங்கள் ஆறாவது படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம், இல்லையா?,” என ஷாரூக்கானை 'டேக்' செய்து குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்தப் பதிவு 'ஸ்பிரிட், கல்கி 2898 ஏடி' குழுவினருக்கான மறைமுகமான பதிலாகவும் பார்க்கப்படுகிறது.