ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

எஸ்.பி.முத்துராமன் முதன் முதலாக உதவி இயக்குனராக அறிமுகமான 'களத்தூர் கண்ணம்மா' படத்தில் அறிமுகமானவர் கமல்ஹாசன். 1985ம் ஆண்டு தனது 50வது படத்தை எட்டினார். செண்டிமென்டாக தனது 50வது படத்தில் கமல் நடிக்க வேண்டும் என்று அவர் விரும்பியபோது அதனை ஏவிஎம் நிறுவனம் ஏற்றுக் கொண்டு படத்தை தயாரிக்கவும் செய்தது. அந்தப் படம் 'உயர்ந்த உள்ளம்'. அம்பிகா நாயகியாக நடித்தார். ராதாரவி வில்லனாக நடித்தார்.
பெருங்கோடீஸ்வரரான கமல் மதுவிற்கும், சூதாட்டத்திற்கும் அடிமையாகி இருப்பார். அவரது உயர்ந்த உள்ளத்தை பயன்படுத்தி அவரை அனைவரும் ஏமாற்றி சொத்துக்களை பிடுங்கி ஏழையாக்கி விடுவார்கள். அப்படி ஏமாற்றுகிறவர்களில் முதன்மையானவர் ராதாரவி. கடைசியில் தன் வீட்டு வேலையாள் மகள் அம்பிகாவை காதலித்து திருமணம் செய்வார். பின்னர் அவரது ஊக்கத்தாலும், கமலின் உழைப்பாலும் இழந்த சொத்துக்களை எப்படி மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
இளையராஜா வழக்கம்போல், எல்லாப் பாடல்களையும் ஹிட்டாக்கிக் கொடுத்திருந்தார். 'எங்கே என் ஜீவனே', 'வந்தாள் மகாலட்சுமியே', 'காலைத் தென்றல் பாடிவரும்' என்ற சூப்பர் ஹிட் பாடல்கள் படத்தில் இடம்பெற்றது.
ஏவிஎம், பஞ்சு அருணாசலம், கமல், இளையராஜா கூட்டணியுடன் களமிறங்கிய எஸ்.பி.முத்துராமனுக்கு இந்த படம் தோல்வி படமாக அமைந்து ஏமாற்றத்தை கொடுத்தது.




