WWE-ல் ராணா டகுபட்டிக்குக் கிடைத்த பெருமை | வீர தீர சூரன் ஓடிடி வாங்கிய விலை இவ்ளோதானா? | ஓடிடி-யில் பெரும் விலைக்கு மோகன்லாலின் எல் 2 :எம்புரான் | புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! |
கொரோனா இரண்டாவது அலை கடுமையாக இருக்கும் இந்த சூழலில் தினமும் தெரிந்தவர்கள், உறவினர்கள் யாராவது ஒருவரின் மரணச் செய்தியைக் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறோம். இந்த துயரமான வேளையில் மற்றவர்களின் துயர்களில் பங்கு கொள்ளவில்லை என்றாலும் ஒரு கொண்டாட்டமான மனநிலையை சிலர் தவிர்க்க மறுப்பது ஏன் என்று தெரியவில்லை.
சமூக வலைத்தளங்களின் பக்கம் சென்றால் இன்னும் சில நடிகைகள் கிளாமர் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு சில நடிகைககள் மட்டுமே கொரானோ பற்றிய பயனுள்ள பல தகவல்களைப் பகிர்ந்து உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஒரு சிலராவது வாரத்திற்கு ஒரு முறைதான் அப்படியான புகைப்படங்களைப் பகிர்கிறார்கள். ஆனால், சிலரோ தினமும் பகிர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அந்தப் புகைப்படங்களையும் மெனக்கெட்டு போய்ப் பார்த்து லைக் செய்து கொண்டும் கமெண்ட் செய்து கொண்டும் சிலர் வேறு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.