'மார்கன்' முதல் 'கண்ணப்பா' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | ஜில்லுனு ஒரு காதலை ஞாபகப்படுத்தும் 'சூர்யா 46' பட போஸ்டர் | மீண்டும் நடிக்க வருகிறார் அப்பாஸ் | கேரளாவில் படமான சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் | தனுஷ் பட கிளைமாக்சை மாற்ற இயக்குனர் எதிர்ப்பு | இளையராஜா பெயரை நீக்கிய வனிதா | மீண்டும் கதை நாயகியான சுவாசிகா | மாரீசனுக்காக வடிவேலு ‛வெயிட்டிங்' | தமிழில் முதல் ஏஐ தொழில்நுட்ப இசை ஆல்பம் | ‛ஜென்ம நட்சத்திரம்' நிறைய சொல்லிக் கொடுத்தது : தமன் |
கடவுள் பெயர் கொண்ட படத்தையும், உலகத்திலேயே இல்லாத மிருகத்தின் பெயர் கொண்ட படத்தையும் இயக்கிய இயக்குனர், இரண்டு படங்களின் வெற்றியால் கொஞ்சம் ஓவராகவே போகிறார் என்கிறது சினிமா வட்டாரம். அவர் அடுத்து இரண்டு படங்களை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார். அதில் ஒன்று முன்னணி நடிகர் ஒருவர் நடிக்கும் படம்.
அந்த இரண்டு படங்களுக்கும் உதவி இயக்குனர்கள் வேண்டும் என சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் சில பல கண்டிஷன்களைப் போட்டுள்ளார். அதுதான் கோலிவுட்டில் இப்போது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
நீட் தேர்வுகளுக்குக் கூட இத்தனை கண்டிஷன்கள் போட மாட்டார்கள். இவர் இவ்வளவு போடுகிறாரே என்று கிண்டலடிக்கிறார்கள். அடுத்தடுத்து வெற்றிகளைக் கொடுத்த மிதப்பில் இருக்கிறாரோ என்கிறார்கள். பல வெற்றிகளைக் கொடுத்தவர்கள் கூட பிற்காலத்தில் அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார்கள். அதனால், அடக்கி வாசிக்க இயக்குனர் கற்றுக் கொள்ள வேண்டும் என அட்வைஸ் வைக்கிறார்கள் சினிமாவின் சீனியர்கள்.