ஜூலை 25ல் ‛அவதார் 3' டிரைலர் | இசை நிகழ்ச்சி! கெனிஷா உடன் இலங்கை சென்ற ரவி மோகன் | ‛பராசக்தி' படத்தில் இணைந்த ராணா | வார் 2 படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மாரி செல்வராஜின் 'பைசன்' பிஸினஸ் எப்படி? | இறுதிக்கட்டத்தை எட்டிய ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் படம் | இலங்கை தமிழ் படத்தில் டி.ஜே.பானு | புராண அனிமேஷன் படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | வசூலை குவிக்க அடுத்து வருகிறது 'ட்ரான்: ஏரிஸ்' | அனிருத் இசை நிகழ்ச்சி திடீர் ரத்து |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம் மகன் நடிகர் துருவ் விக்ரம், மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் இருவரும் ஜோடி சேர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'பைசன்' படத்தில் நடித்து வருகிறார்கள். இருவரும் காதலிப்பதாக தற்போது புது கிசுகிசு ஒன்று பரவி வருகிறது.
'ஸ்போட்டிபை' என்ற மியூசிக் ஆப் ஒன்றில் 'ப்ளூமூன்' என்ற ஒரு கணக்கில் அனுபமா, துருவ் விக்ரம் இருவரும் ஒருவருக்கொருவர் உதட்டுடோடு உதடு வைத்து முத்தமிடும் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. அந்த புகைப்படம் தற்போது நீக்கப்பட்டுவிட்டது. ஆனால், அதற்குள்ளாக பலர் அதை கவனித்துவிட்டனர்.
இருவரும் காதலிக்கிறார்களா அல்லது 'பைசன்' படத்திற்காக இப்படி ஒரு புரமோஷன் செய்துள்ளார்களா என்ற சந்தேகமும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது புரமோஷனாக இல்லை என்றால் 'ஏஐ' மூலம் உருவாக்கப்பட்ட ஒரு புகைப்படம் என கிசுகிசுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவார்கள்.