என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? |

தமிழ் சினிமாவின் டாப் நடிகராக இருந்து விரைவில் தனது கடைசி படத்துடன் சினிமாவை விட்டு விலக உள்ள நடிகர் இரு தினங்களுக்கு முன்பு தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக ரசிகர்களும், கட்சித் தொண்டர்களும் சென்னை புறநகர்ப் பகுதியில் உள்ள அவரது வீட்டில் காத்திருந்தனர். ஆனால், நடிகர் யாரையும் வெளியில் வந்து பார்க்கவில்லை. அவர் அன்றைய தினம் அந்த வீட்டிலேயே இல்லை என்று கிசுகிசுக்கப்பட்டது. சென்னையின் முக்கிய பகுதியில் கடற்கரை அருகில் அமைந்துள்ள பிரம்மாண்ட வீட்டில் அன்றைய தினம் இரவு பிறந்தநாள் பார்ட்டியும் கொடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அவரது நட்பு வட்டாரத்தில் உள்ள முக்கிய நடிகர்கள், நடிகைகள் அதில் கலந்து கொண்டார்களாம். கோலிவுட் வட்டாரங்களில் இந்த 'பார்ட்டி' பற்றிய பேச்சுத்தான் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.