உதவி செய்பவர்களை காயப்படுத்தாதீர்கள்: 'துள்ளுவதோ இளமை' அபிநய் | 'டீசல்' படப்பிடிப்பில் ஹரிஷ் கல்யாணை அதிர வைத்த மீனவர் | கிறிஸ்துமஸ் ரிலீஸாக வெளியாகும் நிவின்பாலியின் 'சர்வம் மாயா' | உங்க பட ரிலீஸ் தேதியை மாற்ற முடியுமா லாலேட்டா ? ; ரிலீஸ் தேதியை அறிவிக்க நடிகரின் புதிய யுக்தி | 'மூக்குத்தி அம்மன் 2' படப்பிடிப்பை நிறைவு செய்த கன்னட நடிகர் துனியா விஜய் | ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' |
பிரிவோம் சந்திப்போம், சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்தவர் ரக்ஷிதா மகாலட்சுமி. பிரிவும் சந்திப்போம் தொடர் முடிந்தது நடிகர் தினேசும், ரக்ஷிதாவும் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட அவர்கள் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2020ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள்.
அதன் பிறகு பிக்பாஸ் சீசன்- 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார் ரக்ஷிதா மகாலட்சுமி. அப்போது தினேஷ் தனக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி டார்ச்சர் செய்வதாக சொல்லி ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார். அதையடுத்து பிக்பாஸ்-7 நிகழ்ச்சியில் தினேஷ் போட்டியாளராக கலந்து கொண்ட போது, இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ரக்ஷிதா மீண்டும் தன்னிடம் இணைவார் என்று அவர் கூறி வந்தார். ஆனால் அது இப்போது வரை நடைபெறவில்லை. மேலும் டிவி சீரியல்களில் நடித்துக் கொண்டே சில படங்களிலும் சிறிய வேடங்களில் நடித்து வந்த ரக்ஷிதா மகாலட்சுமி, அடுத்த சினிமாவில் மாறுபட்ட வேடங்களில் நடிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்.
இதன் காரணமாகவே தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வரும் அவர், தற்போது ரம்யா பாண்டியனை போன்று தனது இடுப்பழகை வெளிப்படுத்தும் போட்டோஷூட் ஒன்று நடத்தி வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகிறார்கள்.