இரண்டு வாரமாக தாக்குப் பிடிக்கும் 'கூலி' | ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு ரிலீஸ் | சிம்பு படத்துக்கு தயாரிப்பாளர் மாற்றமா? | லடாக்கில் சிக்கித் தவிக்கும் மாதவன் | 'கூலி'க்கு 'யுஏ' சான்று கேட்ட வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக் : விஜயகாந்த் பட தலைப்புக்கு அனுமதி மறுத்த தணிக்கை குழு | பிளாஷ்பேக் : சிவாஜி, பத்மினியை சேர்த்து வைத்த பணம் | என் குழந்தைகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் அப்பா : ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார் | 50 ஆண்டு சாதனை, ரஜினிக்கு பாராட்டு விழா : விஷால் பேட்டி | 'எல்ஐகே' அல்லது 'டியூட்' : ஏதாவது ஒன்றுதான் தீபாவளி ரிலீஸ் |
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கியூட் ஜோடியாக வலம் அமீர் - பாவ்னியின் திருமணம் தான் ரசிகர்கள் பலரது எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் அண்மையில் விஜய் டிவி பிரியங்காவின் 15 வருட தொலைக்காட்சி பயணத்தை வாழ்த்தி நடைபெற்ற நிகழ்ச்சியில் அமீர் தனது திருமணம் குறித்தும் பிரியங்கா குறித்தும் பேசியுள்ளார்.
அதில், 'நானும் பாவ்னியும் காதலிப்பதற்கு முக்கிய காரணமே பிரியங்கா தான். பிக்பாஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் கூட எனகும் பாவ்னிக்கும் திருமணம் நடைபெறுவது போல கான்செப்ட் நடத்தப்பட்டது. அதில் எங்களுக்காக தாலி எடுத்துக் கொடுத்தது பிரியங்கா தான். அது வெறும் நிகழ்ச்சிக்காக என்று மட்டுமில்லாமல் என்னுடைய மனதிலும் பிரியங்கா தான் எடுத்து தரவேண்டும் என்று இருந்தது. என்னுடைய நிஜ திருமணத்திலும் பிரியங்கா தான் தாலி எடுத்து தருவார்' என்று கூறினார். மேலும், இந்த வருடத்திற்குள் எனக்கும் பாவ்னிக்கும் திருமணம் நடைபெறும் என்றும் அமீர் கூறியுள்ளார்.