கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை | சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனம் ஏன் ? | 'ஹீரோ மெட்டீரியல்' இல்லை என்ற கேள்வி... : அமைதியாக பதிலளித்த பிரதீப் ரங்கநாதன் | ஒரே நாளில் இளையராஜாவின் இரண்டு படங்கள் இசை வெளியீடு |
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் பிரியங்கா மோகன். சமீபத்தில் அவரை 'டிரோல்' செய்து சமூக வலைத்தளங்களில் நிறைய பதிவுகள் வெளியாகின. ஒரு முன்னணி நடிகருக்கு மேனேஜர் ஆக இருப்பவர் தான் பிரியங்காவின் முன்னாள் மேனேஜர் ஆக இருந்தார். அவரை விட்டு விலகிவிட்டார் பிரியங்கா. அதனால்தான் அந்த முன்னாள் மேனேஜர் பிரியங்காவைப் பற்றி சமூக வலைத்தளங்களில் 'டிரோல்' செய்ய வைக்கிறார் என்று ஒரு சர்ச்சை எழுந்தது.
கடந்த சில நாட்களாக பிரியங்கா மோகன் அரை குறை ஆடையுடன் பாத்ரூமில் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது. அது குறித்து பிரியங்கா மோகன், “ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட தவறான புகைப்படம் ஒன்று சுற்றி வருகிறது. இது போன்ற தவறான புகைப்படங்களை வெளியிடுவதை நிறுத்துங்கள். ஏஐ என்பது நெறிமுறைக்கு உட்பட்டு செய்யப்பட வேண்டிய ஒரு கிரியேட்டிவிட்டி, இப்படி தவறாக செய்வதற்கல்ல. என்ன கிரியேட் செய்கிறோம் என்பதை அறிந்து அதை பகிருங்கள், நன்றி,” என்று குறிப்பிட்டுள்ளார்.
பவன் கல்யாண் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்து வெளிவந்த தெலுங்குப் படமான 'ஓஜி' படம் 300 கோடி வசூலைக் கடந்து ஓடி வருகிறது. அந்த வெற்றியைக் கண்டு பொறாமைப்பட்ட சிலர்தான் இப்படி செய்கிறார்களோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.