இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தமிழ் சினிமாவில் இயக்குனராக, குணச்சித்திர நடிகராகவும், 'எதிர்நீச்சல்' சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான மாரிமுத்து கடந்த வாரம் திடீர் மாரடைப்பால் காலமானார்.
அவர் நடித்து வந்த 'எதிர் நீச்சல்' சீரியலின் கடைசி எபிசோடு இன்று(செப்., 12) ஒளிபரப்பாக உள்ளதாகத் தெரிகிறது. அதற்கான புரோமோ நேற்று வெளியானது. அதில் மாரிமுத்துவுக்கு வேறு ஒருவர் பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார். அந்தக் குரல் துளி கூட பொருத்தமாக இல்லை என ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.
அவரது கதாபாத்திரத்தில் நடிகர் வேல ராமமூர்த்தியை நடிக்க வைக்கப் பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது. அவர் நடிக்க சம்மதிப்பாரா இல்லையா என்பது சில நாட்களில் தெரிந்துவிடும். டிவியில் நடிகைகள்தான் அதிகம் பெயர் வாங்குவார்கள். ஆனால், ஒரு வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் மாரிமுத்து. அதனால்தான் அவரது மறைவு கடந்த வாரம் சமூக வலைத்தளங்களிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.