விஜய்யின் ‛ஜனநாயகன்' படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய லைட் மேன்! | மாடலிங் துறையில் இறங்கிய ஷிவானி நாராயணன்! | மீண்டும் சினிமா படப்பிடிப்பில் பங்கேற்ற பவன் கல்யாண் | ஹைதராபாத்தில் 'ஏஐ' ஸ்டுடியோ திறந்த 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு | யோகிபாபு மீது தவறு இல்லை: பல்டி அடித்த இயக்குனர் | வயது 42 ஆனாலும், திரையுலகில் 22 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம்வரும் த்ரிஷா | 25வது நாளில் 'குட் பேட் அக்லி' | தலைவனாக விஜய் சேதுபதி, தலைவியாக நித்யா மேனன்! | தீபாவளிக்கு வெளியாகும் பைசன்! | 'தொடரும்' படம் தமிழ் பதிப்பு ரிலீஸ் தேதி அறிவிப்பு! |
டிராகன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அஷ்வத் மாரிமுத்து அடுத்து சிம்புவின் 51வது படத்தை இயக்குகிறார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. ஒரு விருது விழாவில் அஷ்வத் மாரிமுத்துவிடம் சிம்பு 51வது பட அப்டேட் பற்றி கேட்டனர்.
அதற்கு அவர் கூறியதாவது, " சிம்பு 51வது படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் முழுவதும் நிறைவு பெற்றுள்ளது. இன்னும் திரைக்கதை மற்றும் வசனம் எழுதும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் துவங்குகிறோம். அடுத்த வருட சம்மருக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்" என தெரிவித்துள்ளார்.