ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

கன்னடம், தெலுங்கு, ஹிந்தி படங்கள் எல்லாம் 1000 கோடி வசூலை கடந்துவிட்டது. ஆனால், தமிழ் சினிமாவில் இதுவரை 1000 கோடி வசூல் எட்டாக்கனியாகவே உள்ளது. அதற்கு காரணம் இங்கு படத்தின் தயாரிப்பில் பெரும்பகுதி நடிகர்களின் சம்பளத்திற்கே போய்விடுகிறது. மீதமுள்ள தொகையை வைத்து குவாலிட்டியான சினிமா எடுப்பதில் சிக்கல் இருப்பதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், அஜித் போன்ற நடிகர்கள் எல்லாம் 150 கோடிக்கு மேல் சம்பளமாக பெறுவதாக கூறுகின்றனர். அவர்களை வைத்தே வியாபாராமும் கூடும் என்பதால் சிலர் அந்த சம்பளத்தை தரவும் முன்வருகின்றனர். ஆனால், நடிகர் சம்பளம் போக, நடிகை, தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் சம்பளத்தையும் கொடுத்து, படத்திற்கும் பட்ஜெட் ஒதுக்குவதால், மேக்கிங்கில் சில சமயம் சமரசம் செய்ய வேண்டியுள்ளது. அதுவே, மேக்கிங்கிற்கு கூடுதல் பட்ஜெட் ஒதுக்கினால், படத்தின் குவாலிட்டி மேலும் மேம்படுவதுடன், படத்தின் வியாபாரமும் வலுப்படும். இதை கருத்தில் கொண்டு முன்னணி நடிகர்கள் தங்கள் சம்பளத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் என சில இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் கூட அவ்வப்போது குரல் கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கப் பொதுக்குழு இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முன்னணி நடிகர்களின் சம்பளம் தொடர்பாக தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதாவது, ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, சிம்பு, விஷால், தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள், தங்கள் முழு சம்பளத்திற்கு பதிலாக படம் வியாபாரமாகும் தொகையில் பங்கு பெற்று நடிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது நடைமுறைக்கு வரும் பட்சத்தில் படத்தின் வியாபாரத்தில் குறிப்பிட்ட சதவீத பங்கை முன்னணி நடிகர்கள் சம்பளமாக பெறுவர். இதனை அந்த நடிகர்கள் ஏற்பது சிரமம் தான் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். நடைமுறைக்கு வந்தால், தமிழ் திரைத்துறையில் புதிய மாற்றத்தை கொண்டு வரும்.




