ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களில் வரும் பெண் கதாபாத்திரங்களில் மிகவும் பிரபலமான கேரக்டர் எது? என்பதை ஆர்மாக்ஸ் என்கிற நிறுவனம் மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் பல நாட்களாக முதலிடத்தை பிடித்து வந்த சுந்தரி கதாபாத்திரத்தை பின்னுக்கு தள்ளி சைத்ரா ரெட்டி நடித்து வரும் கயல் கதாபாத்திரம் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் சுசித்ராவின் பாக்கியலெட்சுமி கதாபாத்திரமும், 3வது இடத்தில் கேப்ரில்லா செல்லஸின் சுந்தரியும், 4வது இடத்தை மதுமிதாவின் எதிர்நீச்சல் ஜனனி கதாபாத்திரமும், 5 வது இடத்தை ஆல்யா மானசாவின் இனியா கதாபாத்திரமும் பிடித்துள்ளது. இந்த டாப் 5 இடங்களில் பாக்கியலெட்சுமி சீரியலை தவிர மற்ற சீரியல்கள் அனைத்துமே சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் என்பது குறிப்பிடத்தக்கது.