'இட்லி கடை' படத்தின் நீளம் குறித்து தகவல் இதோ! | என் அம்மா அளவுக்கு என்னால் சினிமாவில் சாதிக்க முடியாது : ஜான்வி கபூர் | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு தொடங்கியது! | தேசிய விருது : தன் சாதனையை முறியடித்த குட்டி தேவதைக்கு கமல் வாழ்த்து | பிளாஷ்பேக்: சாதனைத் திரைத் தாரகைகள் சரிதா, ஷோபாவை தமிழுக்கு அறிமுகப்படுத்திய கே பாலசந்தர் | பாடல்களில் ஆடியே பிரபலமானேன் என்கிறார் தமன்னா | விரைவில் மறுமணம் செய்யப் போகிறாரா சமந்தா | இவர்கள் தான் எனது ரோல் மாடல் என்கிறார் சாந்தனு | நாளை ஓடிடியில் வெளியாகும் அனுஷ்காவின் காட்டி | கதை நாயகியாக "யாஷிகா ஆனந்த்" நடிக்கும் “டாஸ்” |
வார இறுதி வந்து விட்டது....அதேபோல் சினிமா ரசிகர்களைக் குதூகலிக்கும் விதமாக இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகப் புதுப்படங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. அவை எந்த மாதிரியான படங்கள், எந்த ஓடிடி தளத்தில் வெளியாகின்றன என்பது குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.
ஹிருதயபூர்வம்
இயக்குநர் சத்யன் அந்திக்காட் இயக்கத்தில், நடிகர் மோகன்லால், மாளவிகா மோகனன், சங்கீதா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஓணம் பண்டிகை தினத்தில் வெளிவந்த திரைப்படம் 'ஹிருதயபூர்வம்'. இருதய மாற்று அறுவைசிகிச்சை மூலம் இதயத்தைத் தானமாகப் பெறும் மோகன்லால், இரண்டு அன்புக்கு மத்தியில் சிக்கித் தவிக்கும் விதமாகத் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். ரூ.12கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று கூறப்படும் நிலையில், இந்த திரைப்படம் நாளை (செப்.26) ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
ஓடும் குதிர சாடும் குதிர
மலையாள நடிகர் பஹத் பாசில், கல்யாணி ப்ரியதர்ஷன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'ஓடும் குதிர சாடும் குதிர'. ஓணம் பண்டிகையன்று வெளியான இந்த திரைப்படம் நாளை(செப்.26ம் தேதி) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
சர்கீட்
தொடர் வெற்றிப்படங்களைக் கொடுத்து வரும் நடிகர் ஆசிப் அலி, நடிகை திவ்யா பிரபா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'சர்கீட்'. திரையரங்கில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம் நாளை(செப்.26ம் தேதி) மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
சுமதி வளவு
நடிகர் அர்ஜுன் அசோகன், மாளவிகா மனோஜ், சித்தார்த் பரதன் உள்ளிட்ட பலர் வெளிவந்த திரைப்படம் 'சுமதி வளவு'. த்ரில்லர் கதைக்களத்தை உள்ளடக்கி வெளிவந்த இந்த திரைப்படம் நாளை(செப்.26ம் தேதி) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
Meghalu Cheppina Prema Katha (மெஹலு செப்பினா பிரேமா கதை)
தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற பீல் குட் திரைப்படமான'Meghalu Cheppina Prema Katha (மெஹலு செப்பினா பிரேமா கதை)'. நாளை(செப்.26ம் தேதி) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
Bhaava Theera Yaana (பாவா தீரா யன்னா)
கன்னட மொழியில் வெளிவந்த காதல் திரைப்படம் ' Bhaava Theera Yaana'. கன்னட ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இந்த திரைப்படம் நாளை(செப்.26ம் தேதி) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
Son of Sardaar 2 (சன் ஆப் சர்தார்-2)
இந்தி நடிகர் அஜய் தேவ்கான், மிருணாள் தாக்கூர் நடிப்பில் வெளிவந்த இந்தி திரைப்படம் 'Son of Sardaar 2( சன் ஆப் சர்தார்-2). கமெடி திரைப்படமான இந்த படம் கடந்த ஆகஸ்ட் மாதம் திரையரங்கில் வெளியானது. இந்நிலையில் இந்த திரைப்படம் நாளை(செப்.26ம் தேதி) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.