ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
நடிகை திவ்யா கணேஷ் பாக்கியலெட்சுமி தொடரில் ஜெனி என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதிகமாக சீரியல்கள் நடிக்கவில்லை என்றாலும் முன்னணி நடிகைகளுக்கு இணையாக சோஷியல் மீடியாக்களில் திவ்யாவுக்கு ரசிகர்கள் உள்ளனர். எந்தவொரு பிரச்னையையும் தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் எதிர்கொண்டு வரும் திவ்யா, ஒரு முறை ஐதராபாத்திலிருந்து சென்னைக்கு விமானத்தில் பயணம் செய்த போது, திவ்யாவின் இடுப்பில் ஒரு நபர் கையை வைத்து சில்மிஷம் செய்துள்ளார்.
இதனால் கோபமடைந்த திவ்யா, விமானத்தில் அந்த இடத்தில் வைத்தே அந்நபரின் கன்னத்தில் நாலு அறை கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தை அண்மையில் பேட்டி ஒன்றில் கூறிய அவர், பெண்கள் இதுபோன்ற சம்பவங்களை சகித்துக்கொண்டு செல்லாமல் அப்போதே இதுபோன்ற அற்ப செயல் செய்பவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என அட்வைஸ் செய்துள்ளார். திவ்யாவின் தைரியமான இந்த செயலை தற்போது பலரும் பாராட்டி வருகின்றனர்.