அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
‛பீஸ்ட்' படத்தை அடுத்து மீண்டும் விஜய்யுடன் ‛ஜனநாயகன்', சூர்யாவுடன் ‛ரெட்ரோ', ராகவா லாரன்ஸ் உடன் ‛காஞ்சனா-4' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் பூஜாஹெக்டே. ரஜினியின் ‛கூலி'யில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். அதோடு, ஹிந்தியில் தற்போது வருண் தவானுக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
இந்த நிலையில் நடிகர் வருண் தவானுடன் இணைந்து விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது தன்னுடைய மொபைலை தொலைத்து விட்ட பூஜா ஹெக்டே அதை தேடுவது போன்ற ஒரு வீடியோவை தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறார் நடிகர் வருண் தவான். பின்னர் அந்த செல்போனை தானே பூஜா ஹெக்டேவிடம் எடுத்துக் கொடுக்கிறார். செல்போனை கண்டுபிடித்து தந்ததற்காக உன்னை மன்னித்து விடுகிறேன் என நடிகை பூஜா ஹெக்டே பதிவிட்டுள்ளார்.