கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் | எனக்கு என்ன ஆச்சு ? நஸ்ரியா தன்னிலை விளக்கம் | பிரபாஸ் படப்பிடிப்பில் மிதுன் சக்கரவர்த்திக்கு ஏற்பட்ட கைமுறிவு | கொச்சியில் புது வீடு கட்டினார் நிமிஷா சஜயன் | 'கூலி, 45' ; ஒரேநாளில் வெளியாகும் உபேந்திராவின் 2 படங்கள் | நடிகை ஜனனி திருமண நிச்சயதார்த்தம் ; விமான பைலட்டை மணக்கிறார் | விஜய் டிவி பிரியங்கா 2வது திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா...! |
தொகுப்பாளினியான மணிமேகலை தமிழக இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இவர் ஹூசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டதால் பலரும் மணிமேகலை - ஹூசைன் தம்பதியினர் பற்றி நெகடிவாக பேசி வந்தனர். ஆனால், மணிமேகலையும் ஹூசைனும் தங்களது கடின உழைப்பினால் வாழ்வின் அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறி வருகின்றனர். பைக், கார் என படிப்படியாக வளர்ச்சிக் கண்ட இந்த ஜோடி சில நாட்களுக்கு முன் 2 ஏக்கர் நிலம் வாங்கியிருந்தனர். தற்போது அந்த நிலத்தில் சொந்தமாக வீடுகட்ட திட்டமிட்டுள்ளனர். அதன் முதற்படியாக அந்த நிலத்தில் போர் வெல் போட்டு தண்ணீர் எடுக்கும் வீடியோவை பகிர்ந்து பாஸிட்டிவாக கேப்ஷன் கொடுத்துள்ளனர். அதற்கு ரசிகர்கள் உட்பட பலரும் மணிமேகலை - ஹூசைனுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.