அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
சின்னத்திரை நடிகையான சஹானா ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் புதுப்புது அர்த்தங்கள் தொடரில் ஆதிரா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். கதையில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் இந்த கதாபாத்திரத்தில் முதலில் நீது சிஞ்சு என்பவர் நடித்து வந்தார். அதன்பிறகு அவரை மாற்றிவிட்டு சஹானாவை நடிக்க வைத்தனர். 'புதுப்புது அர்த்தங்கள்' நெடுந்தொடர் என்பதால் சஹானா நடிக்கும் கதாபாத்திரமும் நீண்ட நாட்கள் வரும் என்று எதிர்பார்த்தார். ஆனால், சஹானா 30 எபிசோடுகள் மட்டுமே நடித்துள்ள நிலையில், ஆதிரா கதாபாத்திரம் இறப்பது போல் முடித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏமாற்றமடைந்த சஹானா மிகுந்த வருத்தத்தில் உள்ளாராம்.