அனுமதியின்றி தன் பெயர், படத்தை பயன்படுத்தக்கூடாது: ஐஸ்வர்யா ராய் வழக்கு | சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம் | பிரபாஸ் பிறந்தநாளில் ‛தி ராஜா சாப்' படத்தின் முதல் பாடல் | செப்., 13ல் இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா | அல்லு அர்ஜூனை பார்த்து வியந்த ‛டிராகன்' பட இயக்குனர் | தன் முதல் தமிழ் படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய அனஸ்வரா ராஜன் | கல்கி 2ம் பாகத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா ? கல்யாணி பிரியதர்ஷன் ஆர்வம் | காந்தாரா 2ம் பாகத்தை கேரளாவில் வெளியிடும் பிரித்விராஜ் | லோகா படத்தில் நடிக்கும் வாய்ப்பு மிஸ் ஆனது ஏன் ? ; இயக்குனர் பஷில் ஜோசப் | என்னை முதலில் ஆடிசன் செய்தது மம்முட்டி தான் ; மாளவிகா மோகனன் |
ஸ்பைடர் படத்தில் வில்லன் எஸ்.ஜே.சூர்யாவின் சிறுவயது கதாபாத்திரத்தில் சஞ்சய் என்ற சிறுவன் நடித்திருந்தார். சிறுவயதாக இருந்தாலும் நடிப்பில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு இணையாக வில்லத்தனத்துடன் நடித்து பாராட்டுகளை பெற்றார். அதன்பிறகு சொல்லிக் கொள்ளும் அளவில் படங்கள் நடிக்கவில்லை என்றாலும், ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் ஹீரோயினுக்கு தம்பி கதபாத்திரத்தில் நடித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக 'செம்பருத்தி' தொடரின் கதையே வேற ட்ராக்கில் சென்று கொண்டிருக்கிறது. இதற்கிடையில் சஞ்சய் நடித்து வந்த தம்பி கதாபாத்திரமும் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் அவர் என்ன செய்கிறார் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் புதிதாக ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சிறுவனாக இருந்த சஞ்சய் தற்போது ஆள் அடையாளமே தெரியாத வகையில் பெரியவனாக வளர்ந்து விட்டார். அவரது பெரும்பாலான ரீல்ஸ் வீடியோக்கள் சீரியல் நடிகை தக்ஷனாவுடன் இருப்பதால் தக்ஷனா நடித்து வரும் ஏதாவது சீரியலில் சஞ்சயும் என்ட்ரி கொடுத்திருப்பார் என தெரிய வருகிறது.