‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

'சித்தி 2' தொடரில் ஹீரோயினாக நடித்து வந்தார் ப்ரீத்தி சர்மா. லக்னோவை சேர்ந்த இவர் மாடலிங் மற்றும் நடிப்பின் மீதிருந்த ஆர்வத்தால் படிப்பை 10-ஆம் வகுப்புடன் முடித்துவிட்டு நடிக்க வந்துவிட்டார். கலர்ஸ் தமிழின் திருமணம் சீரியலின் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமான ப்ரீத்தி ஷர்மா, டிக் டாக், ரிலீஸ் வீடியோக்கள் மூலம் தமிழக இளைஞர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். சித்தி 2 சீரியல் திடீரென முடித்து வைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழில் வேறெந்த ப்ராஜெக்டிலும் ப்ரீத்தி நடிக்கவில்லை. தெலுங்கில் ஒளிபரப்பாகும் காவ்யாஞ்சலி தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் புடவையில் அவர் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்களை தமிழ் ரசிகர்கள் ஆசையோடு பார்த்து காதலித்து வருகின்றனர். சீக்கிரம் தமிழில் நடிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.




