டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுக்கும் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், எனக்கு ஒன்றுமே புரியவில்லை. உங்களுக்கு அந்த டாஸ்க் புரிந்ததா இல்லையா? இந்த டாஸ்க்கில் ஒரே ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு எதற்கு அவ்வளவு நேரம் பேசுகிறீர்கள். அதோடு நிரூப் சொன்னால் நான் போய் விடுவேன் என்கிறார் தாமரை. அதேபோல் தாமரை சொன்னால் நான் போய்விடுகிறேன் என்கிறார் நிரூப். இப்படி எல்லோரும் இறங்கிப் போய்விட்டால் எதற்காக கேம் விளையாட வருகிறீர்கள்? இன்னும் இரண்டே வாரம்தான் உள்ளது. நானும் வேண்டாம் என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்னை ஆடியன்ஸ் எவ்வளவு கேள்வி கேட்கிறார்கள் தெரியுமா? லெப்ட் ரைட் வெளுத்து வாங்குங்கள் என்று கூறுகிறார்கள். அதனால் இனிமேல் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன். மூஞ்சில அடிச்ச மாதிரி பேசி விடுவேன் என்று பிக் பாஸ் போட்டியாளர்களைப் பார்த்து எச்சரிக்கிறார் சிம்பு. இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.




