பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | விஜய் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்: சிவராஜ்குமார் வேண்டுகோள் | 60 கோடி செலுத்த ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு நீதிமன்றம் உத்தரவு | நயன்தாரா, கவின் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு |
விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரின் முதல் சீசன் சூப்பர் ஹிட் ஆனது. இதனையடுத்து மிர்ச்சி செந்தில் நாயகனாகவும், ரச்சிதா மஹாலெட்சுமி நாயகியாகவும் நடித்து வரும் இரண்டாவது சீசனும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக 300 எபிசோடுகளை கடந்துள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் நாயகியாக நடித்து வந்த ரச்சிதா தற்போது சினிமா வாய்ப்பு கிடைத்ததன் காரணமாக தொடரிலிருந்து திடீரென விலகிவிட்டார்.
ரச்சிதா விலகியதையடுத்து அடுத்தது மஹாலெட்சுமியாக யார் நடிக்கப் போகிறார் என்ற கேள்வியை ரசிகர்கள் கேட்டு வந்தனர். அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் புது மஹாலெட்சுமியாக அரண்மனை கிளி மோனிஷா நடிக்கவுள்ளதாக தகவல் இணையத்தில் பரவிய வண்ணம் உள்ளது. இதை பார்க்கும் ரசிகர்கள் ரச்சிதாவை போல் மோனிஷாவால் நடிக்க முடியுமா? ரச்சிதா வேற லெவல் நடிகையாச்சே என பேசி வருகின்றனர். ஆனால், மோனிஷா 'நாம் இருவர் நமக்கு இருவர் 2'வில் நடிப்பது குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.