ரஜினி, கமல் இணையும் படம்: லோகேஷ் கனகராஜ்க்கு எதிர்ப்பு | பாட்டு பாடி வட்டி கட்டினார் எஸ்.பி.பி: பாடகர் மனோ சொன்ன ஷாக்கிங் நியூஸ் | கிரிஷ் 4ம் பாகத்தில் இணையும் ராஷ்மிகா? | மீண்டும் சிவகார்த்திகேயனிடம் கதை சொன்ன ஏ.ஆர்.முருகதாஸ் | பைசன் படத்தின் 2வது பாடல் வெளியானது | ‛யாத்திசை' இயக்குனருடன் இணையும் ரவி மோகன் | பிளாஷ்பேக்: பாலுமகேந்திரா ஓவியமாய் தீட்டிய முதல் திரைக்காவியம் “கோகிலா” | அக். 10ல் ஒளிபரப்பாகும் ‛வேடுவன்' வெப் தொடர் | மதராஸி ஓடிடி வெளியீடு எப்போது | சிம்புதேவன் இயக்கத்தில் விமல்? |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் சினேகா. நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்தவர் அதன்பின் இரு குழந்தைகளுக்கு தாயானதால் நடிப்பதை குறைத்து கொண்டு, இல்வாழ்வில் கவனம் செலுத்தினார். இருப்பினும் இடையிடையே ஓரிரு படங்களில் தலைக்காட்டினார். இப்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். இதற்காக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையையும் கணிசமாக குறைத்து, மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் வெளியிட்டுள்ளார். அதற்கு கேப்ஷனாக ‛‛'நீங்கள் சவாலை எதிர் கொண்டால் மட்டுமே மாற்றத்தை பெற முடியும்'' என பதிவிட்டுள்ளார். சினேகாவின் இந்த போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின.