விஷ்ணு எடவனை டிக் செய்த விக்ரம் | ஏஐ ஆபத்து, சட்ட நடவடிக்கை தேவை : ஷ்ரத்தா ஸ்ரீநாத். | தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் |
நடிகை சினேகா-பிரசன்னா தம்பதியினர் காதல் திருமணம் செய்து கொண்டு இனிய இல்லறம் நடத்தி வருகின்றனர். சில நட்சத்திர தம்பதிகளை போல இவர்களுக்கும் கருத்து வேறுபாடு, பிரிவு என்பது போன்று சில வதந்திகள் அவ்வப்போது வெளியானாலும் அவற்றையெல்லாம் புறந்தள்ளி ஒதுக்கிவிட்டு ஆதர்ச தம்பதிகளாக வலம் வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரை தரிசிக்க சென்ற இவர்கள் அங்கிருந்து கிரிவலம் பாதையில் வலம் வந்துள்ளனர்.
அதேசமயம் அப்படி அவர்கள் கிரிவல பாதையில் நடந்த போது கால்களில் செருப்பு அணிந்து நடந்து சென்றதும் செருப்பை அணிந்தபடியே அங்கே தேங்காய் உடைத்தது, பிரார்த்தனை செய்தது என அவர்கள் நடந்து கொண்டதும் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இப்படி புனித தலமான திருவண்ணாமலைய கிரிவலப் பாதையில் செருப்பு அணிந்து செல்லலாமா என்று நெட்டிசன்கள் பலரும் தங்களது கடுமையான விமர்சனத்தை தெரிவித்து வருகின்றனர்.