'ஜனநாயகன்' படத்திற்குக் கடும் சவாலாக இருக்கும் 'ராஜா சாப்' | தெலுங்கு லிரிக் வீடியோவில் புதிய சாதனை படைத்த ஏஆர் ரஹ்மானின் 'பெத்தி' | முந்தைய சாதனையை முறியடிக்குமா விஜய் - அனிருத் கூட்டணி? | இரண்டு கைகளிலும் கடிகாரம் அணிவது ஏன் ? ; அபிஷேக் பச்சனின் அடடே விளக்கம் | ‛ப்ரோ கோட்' டைட்டில் விவகாரம் ; ரவி மோகன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு | நவம்பர் இறுதியில் ரீ ரிலீஸ் ஆகும் மகேஷ்பாபுவின் பிசினஸ்மேன் | போலியான சோசியல் மீடியா கணக்குகள் ; சரத்குமார் பட நடிகை எச்சரிக்கை | ஏழு வருட இடைவெளிக்கு பிறகு வெளியாகும் அனுஷ்கா சர்மாவின் படம் | இதயக்கனி, அன்புள்ள ரஜினிகாந்த், போர் தொழில் - ஞாயிறு திரைப்படங்கள் | ‛தளபதி கச்சேரி' பிளாஸ்ட் : ‛ஜனநாயகன்' முதல் பாடல் வெளியீடு |

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் ஹிந்தியில் நடித்த ‛பரம் சுந்தரி' என்ற படம் ஆகஸ்ட் 29ம் தேதி வெளியானது. அப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, எதிர்காலத்தில் எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார்கள் என்று அவரிடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, மூன்று பிள்ளைகள் பெற்றுக்கொள்ள ஆசைப்படுவதாக கூறியிருந்தார். அதற்கான காரணம் கேட்டபோது, ‛‛இரண்டு பிள்ளைகள் என்றால் அவர்களுக்கிடையே சண்டை வரும். அதனால் அந்த சண்டையை விலக்கிவிட மூன்றாவதாக ஒருவர் தேவை. அதனால் தான் மூன்று பிள்ளைகள் பெற்றுக்கொள்ள விரும்புகிறேன்'' என்று அப்போது கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஹிந்தியில் வருண் தவானுக்கு ஜோடியாக தற்போது ஜான்வி கபூர் நடித்துள்ள இன்னொரு படமான ‛சன்னி சன்ஸ் காரி கி துளசிகுமாரி' என்ற படம் செப்டம்பர் 2ம் தேதி வெளிவர உள்ளது. இந்தப் படம் திருமணம் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகியுள்ளது. இப்படம் குறித்த ஒரு நிகழ்ச்சியில், எப்போது திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளீர்கள்? என ஜான்வி கபூரிடத்தில் கேட்கப்பட்ட இன்னொரு கேள்விக்கு, ‛‛இப்போது என்னுடைய திட்டம், எண்ணம் எல்லாமே சினிமாவை பற்றி மட்டுமே உள்ளது. திருமணத்தைப் பற்றி திட்டமிடவே இல்லை. அதற்கு இன்னும் நிறைய காலம் உள்ளது'' என்று கூறியுள்ளார் ஜான்வி கபூர்.




