ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட நடிகையான இவர், 2016-ம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். கன்னடத்தில் போதிய வாய்ப்பில்லாததால் தெலுங்கு பக்கம் வந்த ராஷ்மிகா, குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக மாறிவிட்டார். பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனாவின் மார்க்கெட், நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது.
தற்போது இந்தி, தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். தமிழில்பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவான கார்த்தியின் 'சுல்தான்' படத்திலும் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா. தனது புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அண்மையில் கூட இன்ஸ்டாகிராமில் 20 மில்லியன் பார்வையாளர்களை பெற்று தென்னிந்திய நடிகைகளை ஓரங்கட்டி சாதனை படைத்தார் ராஷ்மிகா.
தற்போது தெலுங்கில் 'ஆடவல்லு மீக்கு ஜோகர்லு' என்ற படத்தில் நடித்து வருகிறார். சர்வானந்த் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ராதிகா, குஷ்பு, ஊர்வசி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த படப்பிடிப்பின் போது நடிகை ராதிகா மற்றும் ஊர்வசி செய்யும் சேட்டைகளை ராதிகா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் 'நவராத்திரி சுபராத்திரி கலைமகளும்' என்ற பாடலுக்கு ராதிகா மற்றும் ஊர்வசி முகபாவனை செய்து ராஷ்மிகாவை கொஞ்சிக்கொண்டே பாடுகின்றனர். இருவருக்கும் இடையில் நிற்கும் ராஷ்மிகா இருவரின் சேட்டையையும் பார்த்து சிரித்துக்கொண்டே இருக்கிறார்.