லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி நேற்று வெளியாகியுள்ள திரைப்படம் 'டாக்டர்'. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இளம்நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை சிவகார்த்திகேயனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர். நேற்று வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதமே ரிலீசுக்கு தயாரான இப்படம் கொரானா நேரத்தில் பல்வேறு சிக்கலை சந்தித்தது. இதையடுத்து ஓடிடியில் வெளியாகும் என பல வதந்திகள் பரப்பப்பட்டது. ஆனால் இப்படத்தை திரையரங்கில் தான் வெளியிடுவோம் என்று படக்குழு அறிவித்தது. இதையொட்டி நேற்று வெளியான டாக்டர் படத்தின் முதல்காட்சியை நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் திரையரங்கு ஒன்றிற்கு சென்று பார்த்துள்ளனர்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சிவகார்த்திகேயன், நாளை என்றும் நம்கையில் இல்லை, நாம் யாரும் தேவன் கை பொம்மைகளே.. என்றால் கூட போராடு நண்பா, என்றைக்கும் தோற்காது உண்மைகளே.. எதிர் நீச்சலடி, வென்று ஏற்று கொடி என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு நடிகர் சூர்யா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.