டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி |
தெலுங்கில் சர்வானந்துடன் இணைந்து சித்தார்த் நடித்துள்ள படம் மகா சமுத்திரம். இந்த படத்தின் சண்டை காட்சி ஐதராபாத்தில் நடைபெற்றபோது சித்தார்த்தின் முதுகில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு முதுகெலும்பு அறுவை சிகிச்சைக்காக லண்டன் சென்ற சித்தார்த் தற்போது நலமுடன் இந்தியா திரும்பியிருக்கிறார்.
அதையடுத்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், அறுவை சிகிச்சை முடிந்து லண்டனில் இருந்து நாடு திரும்பி விட்டேன். தற்போது மகாசமுத்திரம் படத்தின் டப்பிங்கிற்காக ஐதராபாத்தில் இருக்கிறேன். அனைவரது வாழ்த்துக்கும் நன்றி. ஒரு சண்டை காட்சியின்போது எனது முதுகில் காயம் ஏற்பட்டது. அறுவை சிகிச்சைக்குப்பிறகு நலமுடன் இருக்கிறேன். சில மாதங்களுக்கு கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இப்போதைக்கு கடினமாக உழைத்த ஒரு அழகான படத்தை ரசிகர்களுடன் இணைந்து ரசிக்க தயாராக இருக்கிறேன். விரைவில் அனைவரையும் சந்திப்பேன் என்று தெரிவித்துள்ளார் சித்தார்த்.