மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம் மற்றும் ஹே சினாமிகா போன்ற படங்களில் நடித்தவர் அதிதி ராவ் ஹைதாரி. அதோடு, தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, மராத்தி, ஆங்கிலம் என பல மொழிகளிலும் பரவலாக நடித்து வருகிறார். 2021ம் ஆண்டில் வெளியான மகா சமுத்திரம் என்ற தெலுங்கு படத்தில் சித்தார்த்துடன் இணைந்து நடித்த போது அவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டு பின்னர் திருமணம் செய்து கொண்டார்கள்.
இந்த நிலையில் தற்போது அதிதி ராவ் அளித்துள்ள ஒரு பேட்டியில், சித்தார்த்தை திருமணம் செய்ய கொள்ள நான் ஒரு நொடி கூட யோசிக்கவில்லை. உடனே அதற்கு தயாராகி விட்டேன். அந்தளவுக்கு அவர் ஒரு நல்ல மனிதர். செயற்கை தனம் எதுவுமே கிடையாது. எப்பொழுதுமே ஒரே மாதிரியாக இருக்கக்கூடிய அன்பான மனிதர். எனக்கு நெருக்கமானவர்கள் என்றால் அவர்களை எனது வீட்டுக்கு வர வைத்து உபசரிப்பார். அவரது இந்த செயல் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. நான் சித்தார்த்தை திருமணம் செய்து கொள்வதற்கு அவரது இது போன்ற நல்ல செயல்பாடுகள்தான் காரணம். மேலும் நாங்கள் திருமணம் செய்து கொண்ட போது எனக்கு சரியான பட வாய்ப்புகள் இல்லை. அந்த இடைவெளியில் திருமணம் செய்து கொண்டு இப்போது மீண்டும் அவரவர் பாதையில் நடிக்க தொடங்கி விட்டோம் என்று கூறியிருக்கிறார்.