சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் |

'8 தோட்டாக்கள் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் ஸ்ரீகணேஷ். தற்போது அவர் இயக்கி உள்ள படம் '3BHK' . இதில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, ராதிகா, சைத்ரா, யோகி பாபு, மீத்தா ரகுநாத் உள்பட பலர் நடித்துள்ளனர், அம்ரித் ராம்நாத் இசை அமைத்துள்ளார், தினேஷ் கிருஷ்ணன், ஜித்தின் ஸ்டெயின்லெஸ் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஸ்வா தயாரித்துள்ளார். படம் வருகிற ஜூலை 4ம் தேதி வெளியாகிறது.
படம் பற்றி சித்தார்த் கூறியிருப்பதாவது: '8 தோட்டாக்கள்' படம் பார்த்த பிறகு ஸ்ரீகணேஷ் மீது மிகுந்த மரியாதை ஏற்பட்டது. என்னிடம் இரண்டு கதை இருக்கிறது. அதில் ஒன்றை உங்களுக்குச் சொல்கிறேன்' எனச் சொன்னதுதான் '3BHK' . எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. உடனே ஒப்புக் கொண்டேன். குழந்தைகளின் கண்ணெதிரே, 'நமக்கு சொந்தமாக ஒரு வீடு இருக்க வேண்டும்' என அப்பா அம்மா விரும்புவார்கள். வயசு ஏற ஏற, 'சொந்த வீடு வாங்கலையா?' என்ற கேள்வி அவர்களை பின்தொடர்ந்துகிட்டே இருக்கும், அதுதான் படம். ஒரு நல்ல குடும்பத்தின் உறவுகளை, அதன் அழகை, அருமையாக திரையில் வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.
உணர்வுபூர்வமான ஒரு வாழ்க்கையின் குறுக்கு வெட்டுத் தோற்றம்தான் படம். படத்தில் சைத்ராதான் எனக்கு ஜோடி. நானும், மீதாவும் அண்ணன் தங்கையாக நடித்திருக்கிறோம். ஒரு குடும்பத்தோடு பயணிக்கிற அனுபவத்தை படம் கொடுக்கும். பிரபு என்பது எனது கேரக்டர் பெயர். பிரபுவுக்கு அப்பாவை ரொம்பவும் பிடிக்கும். அப்பாவுக்குப் பிடித்த மாதிரி வளர்ந்து ஜெயித்து பெயர் வாங்கணும்னு நினைப்பான். சொந்த வீடு அனைவரின் கனவு. சொந்த வீடு கட்ட என் அப்பா பட்ட கஷ்டத்தையும், அம்மாவின் கனவையும் நான் பார்த்திருக்கிறேன். நானே கல்யாணத்திற்கு பிறகு குறிப்பாக இந்த படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகுதான் சொந்த வீடு வாங்கியிருக்கிறேன், என்றார்.