கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
'கர்ணன்' படத்திற்குப் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்கும் துருவ் விக்ரமின் படம், தனுஷின் பெயரிடாதப்படம் ஆகிய இரண்டு படங்களை இயக்குகிறார். இந்தப் படங்களை முடித்தப் பிறகு உதயநிதியின் படத்தை இயக்குவதாகவும், இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கே.எஸ்.அதியமான் இயக்கத்திலும், ஆர்டிகிள் 15 இந்திப் படத்தின் தமிழ் ரீமேக்கிலும் உதயநிதி நடித்து வருகிறார். அரசியல் பணிகள் அதிகம் இருப்பதால் தற்காலிகமாக நடிப்புக்கு பிரேக் விட்டுள்ளார்.
மாரி செல்வராஜின் படத்துடன் நடிப்பை கைவிட அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. உதயநிதிக்காக பா.இரஞ்சித்தும் துருவ் விக்ரம் படத்தை தள்ளி வைக்க உடன்பட்டிருப்பதாக உள்வட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது குறித்து அறிவிப்பு வரலாம்.
இந்நிலையில் இந்த படத்தில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் தான் உதயநிதியை நேற்று நடிகர் வடிவேலு சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றாலும் இதன் பின்னணியில் இவர்கள் இணைந்து நடிப்பதற்கான சந்திப்பும் நிகழ்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.