பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் | உஸ்தாத் பகத்சிங் படத்தில் இணைந்த ராஷி கண்ணா | தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ‛இட்லி கடை' முதல் பாடல் | மீண்டும் படம் தயாரித்து, நடிக்கப்போகும் சமந்தா | பெத்தி படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய ராம் சரண் | விஜய்க்கு அரசியல் கட்சி துவங்க தைரியம் வந்ததே இப்படித்தான் : பார்த்திபன் வெளியிட்ட தகவல் | 10 ஆண்டுகளாக சத்தமே இல்லாமல் சூர்யா செய்து வரும் உதவி | அரசியலில் விஜய் ஜெயிப்பது ரொம்ப கஷ்டம் : ரஜினி அண்ணன் சத்ய நாராயணா | அரசியலில் நான் 'பேமஸ்'; சினிமாவில் நான் 'ஆவரேஜ்': பவன் கல்யாண் ஓபன் டாக் | ஸ்கூல் ரியூனியன் : 50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை சந்தித்த நாசர் |
தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் எனப்படும் சைமா விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. 2020ம் ஆண்டுக்கான விருது விழா ஐதராபாத்தில் நடந்தது. இந்த விருது விழாவில் தமிழில் சூரரைப்போற்று படத்திற்கு 6 விருதுகள் கிடைத்தது. விருதுகள் விபரம் வருமாறு:
சிறந்த படம்: சூரரைப்போற்று
சிறந்த இயக்குனர்: சுதா கொங்கரா (சூரரைப்போற்று)
சிறந்த நடிகர் : சூர்யா (சூரரைப்போற்று)
சிறந்த நடிகை: ஐஸ்வர்யா ராஜேஷ் (க.பெ.ரணசிங்கம்)
சிறந்த நடிகர்: (ஜூரி அவார்ட்) அசோக் செல்வன் (ஓ மை கடவுளே),
சிறந்த நடிகை: (ஜூரி அவார்ட்) அபர்ணா பாலமுரளி (சூரரைப்போற்று)
சிறந்த துணை நடிகை: ராதிகா சரத்குமார் (வானம் கொட்டட்டும்)
சிறந்த இசை அமைப்பாளர்: ஜி.வி.பிரகாஷ் (சூரரைப்போற்று)
சிறந்த பாடலாசரியர் பா.விஜய் (பார்த்தேனே... மூக்குத்தி அம்மன்)
சிறந்த பாடகர்: ஹரிஷ் சிவராமகிருஷ்ணன் (வேயோன் சில்லி... சூரரைப்போற்று)
சிறந்த பாடகி: பிருந்தா சிவகுமார் ( வா செல்லம்... பொன்மகள் வந்தாள்)
சிறந்த வில்லன்: மைம்கோபி (காவல்துறை உங்கள் நண்பன்)
சிறந்த அறிமுக நடிகர்: ஸ்ரீராம் கார்த்திக் (கன்னி மாடம்)
சிறந்த அறிமுக நடிகை: ரிது வர்மா (கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்)
சிறந்த அறிமுக இயக்குனர்: ஆர்ஜே.பாலாஜி, சரவணன் (மூக்குத்தி அம்மன்)
சிறந்த அறிமுக தயாரிப்பாளர்: ஒயிட் மூன் டாக்கீஸ் (காவல்துறை உங்கள் நண்பன்)
சிறந்த ஒளிப்பதிவாளர்: நிகித் பொம்மிரெட்டி (சூரரைப்போற்று)
சிறந்த நகைச்சுவை நடிகர்: விவேக் (பல படங்கள்)