லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
5 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்கிறார் வடிவேலு. அவர் முதலில் நடிக்க இருக்கும் படமான நாய் சேகருக்கு டைட்டில் பிரச்சினை இருந்தாலும் ஒரிஜினல் நாய் சேகர் என்ற டைட்டிலுடன் படம் தயாராக இருக்கிறது. லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. ஒன்றிரண்டு படங்களில் கதையின் நாயகனாக நடித்து விட்டு பிறகு காமெடி கேரக்டர்களில் மட்டுமே நடிக்க வடிவேலு முடிவு செய்திருக்கிறார்.
வடிவேலுவின ரீ-என்ட்ரிக்கு பலரும் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராணயன் தனது மனைவி மற்றும் மகளும் பாடகியுமான என்ஞாமி புகழ் தீ ஆகியோருடன் வடிவேலுவை சந்தித்தார். லைகா நிறுவனம் தயாரிப்பில் வடிவேலு நடிக்கும் படத்திற்கு சந்தோஷ் நாராணயன் இசை அமைக்கிறார். அதற்கான சந்திப்பு இது என்று கூறப்படுகிறது. பாடகி தீ வடிவேலுவின் பரம ரசிகை அவரது விருப்பத்திற்காக இந்த சந்திப்பு நடந்ததாகவும் கூறப்படுகிறது.