ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளர் அர்ச்சனா குமார், நடன நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு வந்தவர் இப்போது தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் இதழும் இதழும் இணையட்டுமே என்ற வெப் சீரிசில் நடிக்கிறார்.
இதனை சன்னி லியோன் நடிக்கும் ஓ மை கோஸ்ட் என்ற படத்தை தயாரிக்கும் ஒயிட் ஹோர்ஸ் ஸ்டூடியோ தயாரிக்கிறது. அப்பா காண்டம் என்ற குறும்படத்தின் மூலம் புகழ்பெற்ற ஆர்வா இயக்குகிறார். பிளாக் ஷீப் கலையரசன் தங்கவேல், முபாஷீர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நக்கிறார்கள். இது நகைச்சுவை கலந்த காதல் கதையாக உருவாகி இருக்கிறது.
இந்த வெப்சீரிஸ் ஏழு பாகங்களாக வெளி வர உள்ளது. முதல் பாகம் ஒயிட் ஹோர்ஸ் மீடியா என்ற யூடியூப் தளத்தில் வெளியாகி இருக்கிறது.