லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் மக்கள் தியேட்டருக்கு வருவதற்கு அச்சம் கொள்கிறார்கள். அதோடு தியேட்டர்கள் திறக்கப்பட்டபிறகு வெளியான படங்கள் எதுவும் மக்களை ஈர்க்கவில்லை. ஆங்கில படங்கள் மட்டுமே தற்போது தியேட்டருக்கு சிறிய அளவில் உதவி வருகிறது.
தியேட்டர்கள் முழுமையாக திறக்கப்பட்டாலும் சிறு பட்ஜெட் படங்களுக்கு ஓடிடி தளம்தான் சிறந்த களமாக இருக்கும் என்று தெரிகிறது. செலவு செய்த பணம் கிடைத்தால் போதும் என்று கருதுகிற தயாரிப்பாளர்களுக்கு ஓடிடியே சிறந்த பாதையாகவும் இருக்கிறது. அந்த வகையில் லிப்ட், ஓ மணப்பெண்ணே படங்கள் ஓடிடியில் வெளியாகிறது.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் 2016ம் ஆண்டு வெளியான தெலுங்குப் படம் பெல்லி சூப்புலு. ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், இந்தி மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதன் தமிழ் ரீமேக்தான் ஓ மணப்பெண்ணே. ஹரிஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார்கள். ஏ.எல்.விஜய்யிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்த கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ளார். டிஷ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
பிக் பாஸ் புகழ் கவின் நாயகனாக நடித்துள்ள படம் லிப்ட். நாயகியாக அம்ரிதா ஐயர் நடித்துள்ளார். வினித் வரபிரசாத் இயக்கியுள்ளார். இந்த படம் வெளியீடு தொடர்பாக சமீபத்தில் ஈகா என்டர்டெயின்மென்ட் - லிப்ரா நிறுவனம் இரண்டிற்கும் இடையே மோதல் உருவானது. இரு நிறுவனங்களும் மாறி மாறி குற்றம் சாட்டி வந்தன. தற்போது படம் ஓடிடி வெளியீட்டைத் தேர்வு செய்திருப்பது உறுதியாகியுள்ளது. இந்த படமும் டிஷ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது.