திரைப்பட விழாவில் 'சந்தோஷ்': மத்திய அரசு அனுமதிக்குமா? | சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? |
எதிரியாக இருந்தாலும் கூட ஒரு துக்க விஷயம் நடந்தால் அந்த வீட்டிற்கு சென்று துக்கம் விசாரிப்பதே நமது மரபு. ஆனால் திரையுலகில் ஹீரோக்களாக இருப்பவர்கள் நிஜத்தில் அப்படி இருப்பது இல்லை. பல பிரபலங்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தாத, இரங்கல் கூட தெரிவிக்காமல் இருப்பவர்கள் இங்கு தான் உள்ளனர். இதற்கு முன் அப்படி பல நிகழ்வுகள் நடந்துள்ளன.
சமீபத்தில் தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என பெயர் எடுத்த பாரதிராஜாவின் மகன், நடிகர், மனோஜ் பாரதி(48) மாரடைப்பால் மரணம் அடைந்தார். மகன் தந்தைக்கு செய்ய வேண்டிய நிகழ்வுகளை தந்தை மகனுக்கு செய்யும் சங்கட நிலை பாரதிராஜாவுக்கு ஏற்பட்டது. 83 வயதை கடந்தும் இந்த வயதிலும் சினிமாவில் நடித்துக் கொண்டு, சினிமாவில் நிகழும் பல பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கும் நபராக இருந்து வருகிறார் பாரதிராஜா. அப்படிப்பட்டவரின் மகன் மறைவுக்கு ஏராளமான திரையுலகினர் வந்து அஞ்சலி செலுத்தி, பாரதிராஜாவிற்கு ஆறுதல் கூறினர். பாக்யராஜ், வைரமுத்து உள்ளிட்டோர் மயானத்திற்கும் சென்று கடைசி வரை பாரதிராஜாவுக்கு ஆறுதலாக இருந்தனர். ஆனால் இதே பாரதிராஜாவால் அவரது படங்களில் வாய்ப்பு பெற்று புகழின் உச்சிக்கு சென்ற பல பிரபலங்கள் மனோஜிற்கு அஞ்சலி செலுத்தவில்லை. இன்னும் சிலர் இரங்கல் கூட தெரிவிக்காதது தான் கொடுமை.
இளையராஜா
பாரதிராஜா குடும்பமும், இளையராஜா குடும்பமும் ஆரம்ப காலம் முதலே நண்பர்கள். ஒரு ஊர் காரர்கள், ஒரே காலக்கட்டத்தில் சினிமாவிற்கு வந்தவர்கள். இருவரும் ஒன்றாக இணைந்து பல வெற்றி படங்களை தந்தவர்கள். இளையராஜா மகள் பவதாரிணி இறந்த சமயம் தேனிக்கே வந்து அஞ்சலி செலுத்தினார் பாரதிராஜா. ஆனால் இளையராஜாவோ மனோஜிற்கு ஒரு இரங்கல் வீடியோவை மட்டுமே வெளியிட்டார், நேரில் அஞ்சலி செலுத்தவில்லை. அதன்பின் மனோஜிற்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றினார் இளையராஜா. அதேப்போல் அவர் குடும்பத்தை சேர்ந்த கார்த்திக், யுவனும் வரவில்லை.
ரஜினி
நடிகர் ரஜினியை வைத்து 16 வயதினிலே, கொடிபறக்குது ஆகிய படங்களை பாரதிராஜா இயக்கினார். இவர் படப்பிடிப்புக்காக வெளியூரில் இருப்பதாக சொல்கிறார்கள். அதனால் வரவில்லை என்கிறார்கள். அதற்காக ஒரு இரங்கல் கூடவா தெரிவிக்க கூடாது. இதுவரை ரஜினி ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை.
கமல், அஜித்
கமல் அஞ்சலி செலுத்தவில்லை. அவர் வெளியூரில் இருப்பதால் இரங்கல் மட்டுமே தெரிவித்துள்ளார். அஜித் எந்த ஒரு நிகழ்வுக்குமே வர மாட்டார். மனோஜ் மறைவுக்கும் வரவில்லை, இரங்கலும் தெரிவிக்கவில்லை. நடிகர் விக்ரமும் அஞ்சலி செலுத்தவில்லை, இரங்கலும் தெரிவிக்கவில்லை. மனோஜின் ஆரம்பகால பட விழாக்களில் அஜித், விக்ரம் எல்லாம் கலந்து கொண்டு வாழ்த்தி உள்ளனர். இவர்கள் இருவருமே வரவில்லை.
ஏஆர் ரஹ்மான்
இளையராஜாவை பிரிந்த பின் ஏஆர் ரஹ்மான் உடன் தொடர்ந்து பயணித்தார் பாரதிராஜா. அவரும் கூட மனோஜிற்கு அஞ்சலி செலுத்தவில்லை. இத்தனைக்கும் மனோஜ் அறிமுகமான ‛தாஜ்மஹால்' படத்திற்கு ரஹ்மான் தான் இசையமைத்து இருந்தார்.
இளம் நடிகர்கள்
அதேப்போல் இன்றைய இளம் தலைமுறை நடிகர்களான சிம்பு, தனுஷ் ஆகியோருடனும் பாரதிராஜா நடித்துள்ளார். அதிலும் சிம்பு உடன் மாநாடு படத்திலும் நடித்தார் மனோஜ். இவர்களும் அஞ்சலி செலுத்தவில்லை, தனுஷ் ஒரு இரங்கல் டுவீட் கூட போடவில்லை. மனோஜின் இறுதி சடங்கு முடிந்த பிறகு அன்று இரவு ஒரு இரங்கல் டுவீட் போட்டார் சிம்பு. இவர்களை தவிர்த்து ரவி மோகன், ஆர்யா, விஷால்(தயாரிப்பாளர் சங்க தலைவர்) வடிவேலு, இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், அட்லி, நெல்சன் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தவில்லை. இரங்கலும் தெரிவிக்கவில்லை.
பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்ட கார்த்திக், ரதி, ரேவதி, ரஞ்சனி, விஜயசாந்தி போன்ற நடிகர், நடிகைகளும் வரவில்லை. இன்றைக்கு முன்னணி நடிகைகளாக இருக்கும் நயன்தாரா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் போன்ற நடிகைகளும் ஒரு இரங்கல் டுவீட் கூட போடவில்லை.
சினிமாக்காரர்கள் எவ்வளவு சுயநலவாதிகள் என்பதையே இது காட்டுகிறது. ஏறுகிற வரை தான் ஏணிக்கு மரியாதை தருவார்கள். ஏறிய பிறகு அதே ஏணியை எட்டி உதைப்பார்கள் என்பவதற்கு மனோஜ் இறப்பு சம்பவமும் ஒரு உதாரணம்.