டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான சூரி அடுத்து கதையின் நாயகனாக வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து குணச்சித்திர வேடங்களிலும் கலக்கி வருகிறார். இவரது அண்ணன் முத்துராமலிங்கத்தின் மகள் திருமண விழா கடந்த 9ம் தேதி மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
சூரி முன் நின்று திருமணத்தை நடத்தி வைத்தார். திருமணத்திற்கு நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கருணாஸ், சீமான் உள்ளிட்ட பலர் நேரில் சென்று மணமக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள். இந்நிலையில், அந்த திருமணத்தில் 10 சவரன் மதிப்பிலான நகை கொள்ளை போனதாக கீரைத்துறை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்ததில் பரமக்குடியை சேர்ந்த விக்னேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.




