சக்தித் திருமகன், கிஸ் படங்களின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | அமெரிக்க பிரீமியரில் பவன் கல்யாணின் ஓஜி படம் செய்த சாதனை! | எண்ணம் போல் வாழ்க்கை என்பது என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது! -இட்லி கடை டிரைலர் விழாவில் தனுஷ் பேச்சு | ஷேன் நிகாமிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன்: சாந்தனு | பவன் கல்யாண் படத்திற்கு சலுகைகளை அள்ளி வழங்கிய ஆந்திர அரசு | பிளாஷ்பேக்: 40 வருடங்களுக்கு முன்பே பிகினியில் கலக்கிய ஜெயஸ்ரீ | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் ஆதிக்கம் செலுத்திய சி.ஆர்.ராஜகுமாரி | அவர்களை பிதுக்கணும். மசாலா தடவணும்... சமூகவலைதள பார்ட்டிகள் மீது கோபமான வடிவேலு | கவர்ச்சி உடைகளுக்கு வரும் விமர்சனம் குறித்து கவலை இல்லை! - நடிகை வேதிகா | மலையாளத்தில் அறிமுகமாவதை உறுதிபடுத்திய டிஎஸ்கே! |
சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் அண்ணாத்த. இப்படத்தின் பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. ஒரு ஊரில் ரஜினியின் ரசிகர்கள் அண்ணாத்த பேனருக்கு முன்பு நடுரோட்டில் வைத்து ஆடு பலி கொடுத்து, அந்த ரத்தத்தை பேனர் மீது அபிஷேகம் செய்தனர் . இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தமிழ்வேந்தன் என்ற வழக்கறிஞர் இதுகுறித்து டிஜிபி அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், சில தினங்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தின் போஸ்டர் வெளியானபோது அவரது ரசிகர்கள் அண்ணாத்த படத்தின் போஸ்டர் முன்பு கொடூரமாக ஒரு ஆட்டை பலி கொடுத்து அந்த பேனருக்கு ரத்த அபிஷேகம் செய்துள்ளனர். நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவம் பெண்கள், குழந்தைகள் செல்லும் நடுரோட்டில் நடைபெற்றுள்ளது. ஆனால் இதுகுறித்து நடிகர் ரஜினி இதுவரை எந்தவித கண்டனமும் தெரிவிக்கவில்லை. அவரது செயல்பாடு இதை ஆதரிப்பது போலவே உள்ளது.
கோயில்களில், கறிக்கடைகளில் ஆடு வெட்டுவதையே ஒதுக்குப்புறமாக வைத்து செய்து வருகிறார்கள். ஆனால் ஒரு நடிகரின் கட்-அவுட்டுக்கு இப்படி நடுரோட்டில் ஆட்டை பலி கொடுத்தது கொடூரமானது. அதனால் இந்த செயலை கண்டிக்காத ரஜினி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.