விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
நாகார்ஜுனா - அமலாவின் வாரிசான, இளம் ஹீரோ அகில் தற்போது ஏஜெண்ட் என்கிற படத்தில் நடிக்கிறார். ஆக்சன் கதையம்சத்துடன் உருவாகும் இந்த படத்தை சயீரா நரசிம்ம ரெட்டி படத்தை இயக்கிய சுரேந்தர் ரெட்டி. இயக்குகிறார். இந்தப்படத்தின் இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தமாகி இருந்த நிலையில் தற்போது இந்தப்படத்தில் இருந்து தன்னை விலக்கிக்கொண்டுள்ளார் தமன்.
அதற்காக தமனுக்கு படக்குழுவினருகும் பிரச்சனை என்றெல்லாம் நினைத்து விட வேண்டாம். தற்போது முன்னணி நடிகர்களின் படங்களில் பிசியாக இருக்கும் தமன், அடுத்தடுத்து அவர்கள் படங்களை முடித்துக்கொடுக்க வேண்டிய சூழலில் இருக்கிறாராம். கொரோனாவின் இரண்டு அலைகள் காரணமாக தேதிகளில் நெருக்கடி ஏற்பட்டதால் தான் இந்த முடிவை எடுத்துள்ளாராம். தமனுக்கு பதிலாக தற்போது ஹிப் ஹாப் தமிழா ஆதி இந்தப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறாராம்.