மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா | சென்னை குற்ற சம்பவ பின்னணியில் உருவான 'சென்னை பைல்ஸ்' | 'டூரிஸ்ட் பேமிலி' இடத்தை பிடிக்குமா 'ஹவுஸ் மேட்ஸ்' | பாடல் இல்லாத படம் 'சரண்டர்' | பிளாஷ்பேக்: மாதவி இரு வேடங்களில் நடித்த படம் | பிளாஷ்பேக்: 3 சகோதரிகள் இணைந்து நடித்த படம் | மோகன்லாலின் நவரச வீடியோவை வெளியிட்ட ‛மலைக்கோட்டை வாலிபன்' பட இயக்குனர் |
மிஷ்கினின் அஞ்சாதே படத்தில் கவனிக்கத்தக்க நடிகராக அறிமுகமானவர் நடிகர் அஜ்மல். அதன்பின் படங்கள் சரியாக அமையாத நிலையில் மீண்டும் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் வெளியான கோ படத்தில் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார். இடையில் மருத்துவ மேற்படிப்பிற்காக லண்டன் சென்றவரை, சமீபத்தில் நயன்தாரா நடித்த நெற்றிக்கண் படத்தில் தான் பார்க்க முடிந்தது.
நெற்றிக்கண் படத்தில் நயன்தாரா கதாபாத்திரத்திற்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்த வில்லனாக நடித்திருந்தார் அஜ்மல். இந்தநிலையில் மீண்டும் நயன்தாராவுடன் இன்னொரு படத்திலும் இணைந்து நடிக்கிறார் அஜ்மல். மலையாளத்தில் பிரித்விராஜ், நயன்தாரா நடிக்க அல்போன்ஸ் புத்திரன் இயக்கம் படத்தில் அஜ்மலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் தானே கூறியுள்ள அஜ்மல், இந்தப்படம் அல்போன்ஸ் புத்ரனின் நேரம் படம் பாணியில் விறுவிறுப்பாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.