விஜய் பட இயக்குனர் உடன் இணையும் சல்மான் | பாண்டிராஜ் படத்தில் ஜெயராம், ஊர்வசி | உறவு பிரியாமல் இருக்க 'பூதசுத்தி விவாஹம்' செய்த சமந்தா | ரஜினி பிறந்தநாளில் ‛எஜமான்' ரீ ரிலீஸ் | மூளை குறைவாக இருப்பதால்தான் நடிகராக இருக்கிறேன்: சிவகார்த்திகேயன் | பிரபல பாலிவுட் இயக்குனரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் தமன்னா | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை ரீமேக் செய்த விசு | பிளாஷ்பேக்: அந்தக் கால 'மிடில் கிளாஸ்' | அப்பாவுக்கு என்னாச்சு? கவுதம் ராம் கார்த்திக் விளக்கம் | அமீரகத்திற்காக சிறப்பு பாடல் உருவாக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் |

கடந்த 2017 ஆண்டு வெளியான திரைப்படம் அருவி. இப்படத்தில் நடித்த அதிதி பாலன் தன் நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். இத்திரைப்படத்திற்காக, சிறந்த நடிகைக்கான சில விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். இப்படத்தைத் தொடர்ந்து வேறு எந்தப் படத்திலும் அதிதி பாலன் நடிக்கவில்லை.
இடையில், ஒரு ஆந்தாலஜி படத்தில் மட்டும் நடித்தார். இந்நிலையில், பிருத்திவிராஜ் நடிப்பில் உருவான கோல்டு கேஸ் மலையாள படத்தில் அதிதி நடித்திருக்கிறார். இந்தப் படம் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது. மேலும் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான நவரசா படத்திலும் அதிதி பாலன் நடித்திருந்தார்.
தற்போது அதிதி பாலன், தனது சமூக வலைத்தள பக்கத்தில் நெருப்பு வளையத்தை கை மற்றும் இடுப்பில் வைத்து சுற்றும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், அதிதி பாலனின் திறமையை பாராட்டி வருகிறார்கள். அதே சமயம் சிலர் பதறிப்போய் ஏன் இந்த விபரீத விளையாட்டு என்றும் கேட்டு வருகிறார்கள்.




