அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
அருவி படத்தின் மூலம் புகழ்பெற்றவர் அதிதி பாலன். அதன் பிறகு பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தார். 3 வருட இடைவெளிக்கு பிறகு குட்டி ஸ்டோரி என்ற அந்தாலஜி படத்தில் ஒரு கதையில் நடித்தார். கோல்ட் கேஸ், படவேட்டு என்ற இரண்டு மலையாள படங்களில் நடித்து விட்டு மீண்டும் தற்போது தமிழுக்கு வந்திருக்கிறார். தங்கர் பச்சான் இயக்கும் கருமேகங்கள் கலைகின்றன படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அருவி படத்திற்கு பிறகு முழுமையான நாயகியாக நடிக்கும் படம் இது.
இதற்கிடையில் சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் படத்தில் நடித்து வந்தார். இதில் பெரிய கேரக்டரில் நடிக்கிறார் என்று எல்லோரும் கருதிக் கொண்டிருக்கும் நிலையில் படத்தில் சமந்தாவின் அதாவது கதைப்படி சகுந்தலையின் தோழிகளில் ஒருத்தியாக அவர் நடித்திருப்பது டிரைலர் மூலம் தெரியவந்துள்ளது. ஒரு வேளை அவருக்கு கதையில் வேறு முக்கியத்தும் எதுவும் இருக்கிறதா என்பது படம் வெளிவந்த பிறகுதான் தெரிய வரும்.