வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
நடிகை சமந்தா நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் சகுந்தலம். இயக்குனர் குணசேகர் இயக்கிய இந்த படத்தில் நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரூ.60 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த படம், நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று உலகளவில் ரூ.7 கோடி மட்டும் வசூலாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்திருந்தார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் தில் ராஜூ இந்த படம் குறித்து வேதனையாக பேசியுள்ளார். அதன்படி, சகுந்தலம் படம் 3டி தொழில்நுட்பத்துடன் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்டது. சுமார் ரூ.65 கோடி பட்ஜெட்டில் தயாரித்த இப்படம் ரூ.7 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. இந்த படம் வெளியாவதற்கு முன்பே பிரபல ஓடிடி தளம் ஒன்றுக்கு ரூ.35 கோடிக்கு விற்கப்பட்டதால் நஷ்டம் ரூ. 22 கோடியாக குறைந்துள்ளது இல்லையெனில், பெருத்த நஷ்டத்தை சந்தித்து இருப்பேன் என்று கூறியுள்ளார். தனது 25 வருட சினிமா பயணத்தில் இது போன்ற ஒரு தோல்வியை சந்தித்தது இல்லை என்று மன வேதனையுடன் தெரிவித்துள்ளார் தில் ராஜூ.