சின்மயி மன்னிப்பு : இயக்குனர் பேரரசு பதிலடி | கைவசம் 3 படங்கள் : தமிழில் கால் பதிக்க நினைக்கிறார் கிர்த்தி ஷெட்டி | கிண்டல், கேலி, நெகட்டிவ் எண்ணம் : சமூக வலைதளங்களை தவிர்க்கும் திரைபிரபலங்கள் | நல்ல படம் பண்ணிட்டு ரிட்டையர்டு : கமல்ஹாசன் | விஜய் பட இயக்குனர் உடன் இணையும் சல்மான் | பாண்டிராஜ் படத்தில் ஜெயராம், ஊர்வசி | உறவு பிரியாமல் இருக்க 'பூதசுத்தி விவாஹம்' செய்த சமந்தா | ரஜினி பிறந்தநாளில் ‛எஜமான்' ரீ ரிலீஸ் | மூளை குறைவாக இருப்பதால்தான் நடிகராக இருக்கிறேன்: சிவகார்த்திகேயன் | பிரபல பாலிவுட் இயக்குனரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் தமன்னா |

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. தெலுங்கில் 'சாகுந்தலம்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடித்து வருகிறார்.
தொடர்ந்து இரு மொழிகளிலும் சமந்தாவைத் தேடி பல வாய்ப்புகள் வருகிறதாம். மேலும், வெப் சீரிஸ்களில் நடிக்கவும் கேட்டு வருகிறார்களாம். ஆனால், சில மாதங்கள் சினிமாவில் நடிக்காமல் ஓய்வெடுக்கலாம் என சமந்தா முடிவு செய்துள்ளாராம்.
இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில், “இப்போது சமந்தா 2.0 வெர்ஷனைப் பார்த்து வருகிறீர்கள். விரைவில் சமந்தா 3.0 வெர்ஷனைப் பார்ப்பீர்கள். நடிப்பதை விட மாட்டேன்,” என்று தெரிவித்துள்ளார்.
நாக சைதன்யாவுடன் சமந்தாவுக்குத் திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. குழந்தை பெற்றுக் கொள்ள அவர் முடிவு செய்துவிட்டார் என்று வந்த தகவல்களுக்குத்தான் அப்படி பதிலளித்துள்ளாராம்.
சமீபத்தில் கோவாவில் ஒரு பார்ம் ஹவுஸை சமந்தா, நாகசைதன்யா வாங்கியுள்ளார்கள். அங்கு புதிதாக கட்டுமான வேலைகள் ஆரம்பமாக உள்ளதாம். ஒரு வேளை அதைக் கவனிப்பதற்காகவும் சமந்தா சிறிது ஓய்வெடுக்கலாம் என்றும் டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.




