நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

படங்களில் நடித்தாலும் சரி, நடிக்கவில்லை என்றாலும் சரி செய்திகளில் தொடர்ந்து இடம் பெற்று வருகிறார் நடிகை சமந்தா. தற்போது தமிழ், தெலுங்கில் எந்தப் படத்திலும் அவர் நடிக்கவில்லை. ஆனாலும், அவரது சமூக வலைத்தளங்களில் பதிவிடும் புகைப்படங்களால் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
காதல் கணவர் நாக சைதன்யாவை பிரிந்த பிறகு சில வருடங்கள் தனிமையில் இருந்தார் சமந்தா. இயக்குனர் ராஜ் நிடிமொரு என்பவரை, சமந்தா காதலிப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இருவரும் இணைந்து சில புகைப்படங்களை ஏற்கெனவே வெளியிட்டுள்ளார்கள். தற்போது அமெரிக்காவில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இருவரும் ஜோடியாகவே சென்றுள்ளார்கள்.
இதற்கு முன்பும் புகைப்படங்களைப் பதிவிட்ட போது நிறைய கமெண்ட்டுகள் வந்தன. ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல் தற்போது அமெரிக்க பயணப் புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார் சமந்தா. அந்தப் பதிவிற்கு 12 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகள், 3000 வரையிலான கமெண்ட்டுகள் வந்துள்ளன.
நாகசைதன்யா இரண்டாவது திருமணம் செய்து கொண்டதைப் போல, சமந்தாவும் விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.