உண்மை கதையில் யோகி பாபு | வெற்றி ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகை | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பும் ஷ்ரத்தா | 'மாமன்' சூரியின் கதை: இயக்குனர் தகவல் | பிளாஷ்பேக்: பல தலைமுறைகளை வாழ வைத்த 'மைடியர் குட்டிச்சாத்தான்' | பிளாஷ்பேக்: காதல் சின்னத்தை மீட்டெடுக்க விரும்பிய வி.என்.ஜானகி | மே 1 : சினிமா ரசிகர்களுக்காக பல வெளியீடுகள் | கவினின் 'டாடா' படம் ஓடிடி.,யில் எங்கே போனது? | ஓடிடி.,யில் விலை போகாத 'கேங்கர்ஸ்' | வேலை நாட்களில் எடுபடாத விஜய்யின் சச்சின் |
கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் படம் 'இந்தியன் 2'. படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விபத்து ஏற்பட்ட போது நிறுத்தப்பட்ட, இப்படத்தின் படப்பிடிப்பு அதன்பின் தொடங்கப்படவில்லை. மேலும் தயாரிப்பு தரப்புடன் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தியன் 2 படத்தை கிடப்பில் போட்ட இயக்குனர் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் இயக்க உள்ளார்.
இதனிடையே, இந்தியன் 2 படத்தை முடிக்காமல் வேறு படத்தை ஷங்கர் இயக்க தடை விதிக்க கோரி ஐகோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்ததது.
இந்த விவகாரம் குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்த கமல்ஹாசன், சமீபத்திய பேட்டியில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், “'இந்தியன் 2' படத்தின் 60 சதவீத காட்சிகள் முடிவடைந்துள்ளது. இப்படத்தை சுற்றியுள்ள பிரச்னைகள் கூடிய விரைவில் முடிக்கப்பட்டுவிடும். விக்ரம் படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் 'இந்தியன் 2' பட பணிகள் ஆரம்பிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.