நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
கடந்த 2019ல் இயக்குநர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான திகில் திரைப்படம் 'காஞ்சனா 3'. இந்த படத்தில் ஓவியா, வேதிகா, நிக்கி டம்போலி மற்றும் அலெக்சாண்ட்ரா ஜாவி என நான்கு கதாநாயகிகள் நடித்திருந்தனர். இதில் ரோசி எனும் கதாபாத்திரத்தில் பிளாஷ்பேக் காட்சிகளில் நடித்திருந்தவர் அலெக்ஸாண்ட்ரா.
ரஷ்ய நாட்டு மாடல் நடிகையான இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஒருவர் பாலியல் தொல்லை தருவதாக புகார் அளித்திருந்தார். இதையடுத்து அந்த புகைப்பட கலைஞரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதன்பிறகு கோவாவிற்கு சென்ற அவர், அங்கு ஒரு வீட்டை வாடகை எடுத்து வசித்து வந்தார். தனது காதலருடன் வசித்து வந்த அவர், நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலைக் கொண்டுள்ளார். அலெக்ஸாண்ட்ரா தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமான விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திரையுலகில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.