ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடித்த வேதாளம் திரைப்படம் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. இப்படத்தில் அஜித் ஜோடியாக சுருதிஹாசனும், தங்கை கதாபாத்திரத்தில் லட்சுமிமேனனும் நடித்து இருந்தனர். தற்போது இப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் அஜித் வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார்.
'போலா ஷங்கர்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை மெஹர் ரமேஷ் இயக்க உள்ளார். இப்படத்தில் சிரஞ்சீவியின் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகி உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ரக்ஷ பந்தன் தினமான நேற்று நடிகர் சிரஞ்சீவிக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் ராக்கி கட்டுவதை போன்ற புகைப்படம் அடங்கிய சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது.