ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
நடிகர் கமல்ஹாசன் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், தனது திறமையால் படிபடியாக முன்னேறி முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார். தமிழின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித் உள்ளிட்டவர்களோடும் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் பிசியான நடிகையாக மாறியுள்ள ஸ்ருதிஹாசன், 'சலார்' படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக நடித்து முடித்துள்ளார்.
நடிப்பு, நடனம், பாடகி என பன்முக திறமைக்கொண்டு சினிமாவில் பணியாற்றி வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் ஸ்ருதிஹாசன். இந்நிலையில் மும்பையில் வசித்து வரும் ஸ்ருதி, அங்கு முறையாக பாக்சிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இதையடுத்து பயிற்சியாளருடன் வெறித்தனமாக பயிற்சி செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ருதிஹாசன் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வேகமாக வைரலாகி வருகிறது. சமீபகாலமாக நடிகைகள் பாக்சிங் பயிற்சியில் ஆர்வம் காட்டுகிறார்கள். நிவேதா பெத்துராஜ், சமீரா ரெட்டி, ரகுல் பிரீத் சிங் வரிசையில் ஸ்ருதியும் இணைந்துள்ளார்.