ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
குறும்படங்கள் மூலம் பிரபலமான இயக்குனர் தினேஷ் பழனிவேல் கதிர் என்ற படம் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது, 25 வயதுக்குள் எல்லாம் முடிந்து விட்டது என நினைக்கும் ஒரு இளைஞன், வாழ்க்கையை உற்சாகமாக வைத்திருக்கும் 65 வயது மூதாட்டியிடம் ஞானம் பெறுவது தான் இந்தப் படத்தின் கதைக் களம். கதிரின் கல்லூரி வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களும் சாவித்திரிப் பாட்டியின் 'பிளாஷ் -பேக்' கதையும் பார்வையாளர்களுக்கு இரண்டு மாறுபட்ட உணர்வுகளைக் கொடுக்கும்.
கதாநாயகனாக வெங்கடேஷ் அறிமுகமாகிறார். சாவித்திரி பாட்டியாக 'ஒரு முத்தசி கதா' மலையாளப் படத்தின் மூலம் புகழ்பெற்றிருக்கும் ரஜினி சாண்டி நடிக்கிறார். அவரைத் தமிழுக்குக் கொண்டு வருவது எங்களுக்குக் கிடைத்த கௌரவம். இவர்களுடன் சந்தோஷ் பிரதாப், பவ்யா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 'அங்கமாலி டைரீஸ்', 'ஜல்லிக்கட்டு' உட்பட 50-க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களுக்கு இசையமைத்துவிட்ட முன்னணி இசையமைப்பாளர் பிரசாந்த் பிள்ளை இசையமைக்கிறார். முதியவர்களின் அனுபவம் இளைய தலைமுறைக்கான வரம் என்பதை படம் விளக்கும்.